முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நீங்கள் அறியாமலோ அறிந்தோ இந்து சனாதனத்தை கொண்டாடி கொண்டு தான் இருக்கிறீர்கள்..!

 காந்தாரா என்ற படம் பற்றி பலரும் பெருமையாக பேசினார்கள். நானும் சில  கட்டுரைகள் படித்தேன். படம் பார்க்க தயாரான போது இயக்குனரின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. கொஞ்சம் யோசித்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பார்த்தேன். ரொம்பவே யோசித்தேன். நான் யோசித்தது போலவே பலரும் யோசிக்க தொடங்கினார்கள். இப்போது புரிய தொடங்கி இருக்கும் அது டெக்னிகலாக, மிக நேர்த்தியாக நம் தலைக்குள் ஊற்றப்பட்ட விஷம் என்பது. நிற்க. ஜெகன்மோகன்ரெட்டி எட்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு விசயம் சொன்னார் “ ஆர்.எஸ்.எஸின் ஆப்ரேஷன் திராவிடம் திட்டம் “ தென்னகத்தை இனி சீர்குலைக்கும். அதனை எதிர்க்க எல்லாரும் ஒன்றினைய வேண்டுமென்றார். பின்னாளில் அவரும் அதில் ஒரு கண்ணியானர்.  சந்திரசேகரரெட்டி கிட்டதட்ட இதே கருத்தை வேறு ஒருதொனியில் சொன்னார். தென்னிந்தியாவை பலி கொடுத்து அதன் பொருளாதார அரசியல் சுதந்திரங்களை திருடி வடக்கே வாழ வைக்க முயல்கிறார்கள் என்றார். கூர்ந்து அரசியலை கவனியுங்கள். காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் ஓரளவு இருக்கிறது. இது போக அங்கே ஒன்று அல்லது இரண்டு மாநில கட்சிகள் இருக்கும். பிஜேபி என்பதே கிடையாது பல மாநிலங்களில...

கடவுளுக்கே கிடைக்காத வசதி, வாய்ப்பு...அத வச்சி என்ன செஞ்கிட்டுருக்கோம்!

இந்த ஒரு மாசத்தில நாம ஒரு தடவையாச்சும் பொன்னியின் செல்வன்ங்கிற பெயரை உச்சரிச்சு இருப்போம். அதை படிச்சிருக்கோம் படிக்கல,  புடிக்கும் புடிக்காதுங்கிறத தாண்டி பேசியிருப்போம். நாம பொது சமூகத்தோட  இணைச்சிருக்கோம். இணைக்கப்பட்டிருக்கோம்னு தெளிவா தெரியுது. உடனே ஒரு விசயம் பேசு பொருள் ஆகுது. ஒரு காலத்தில் எம்.ஜியார் படமோ சிவாஜி படமோ அட அரசின் ஏதோ ஒரு அறிவிப்போ வந்தா தண்டோட போடணும்( தற்போது தடை செய்யப்பட்டுள்ளது)... அது பரவ எப்படியும் ஒரு வாரமாகும். இது நகரத்திற்கு. அட எம்.ஜியார் இறந்த செய்தி தமிழ்நாடு முழுக்க  அதாவது கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர  24 மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இன்னைக்கு அப்படியில்லை. சுடச்சுட இன்னும் சொல்லபோனா மாவு ரெடி செய்யலாமானு அவங்க பேசும் போதே நாம தெரிஞ்சுக்கிறோம்.  அட, நானெல்லாம் சாதரண ஆள், என்னோட நண்பர் குழுகிட்ட ஒரு வயலின் வாங்கலாம்னு இருக்கேனு சொல்றேன், அது பற்றி பேசுகிறேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு வயலின் வாங்க  சொல்லி கூகுளில் தானே விளம்பர தகவல் வருது.  பேஸ் புக் வந்தா.. வயலின் வகுப்பு விளம்பரம் வருது. உலகம் இவ்ளோதான். இனி இப்ப...

இதையறிந்து பணம் ஈட்டுங்கள்...ஈர்க்கப்பட வைத்த நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும்..!

அதிக பணம் நிம்மதிக்கு கேடுங்கிறவன் எல்லாம் பணக்காரானவே இருக்கீங்க... கொடுங்க... வலிக்குதா செரிக்குதா நாங்க அனுபவிச்சு பார்த்து தெரிஞ்சுக்கிறோம்....  இது கார்த்திக் சுப்புராஜ் எழுத்துகள். எந்த  ஒரு மத ஆன்மிக சொற்பொழிவ கேட்டாலும்  இப்படி சொல்றானுக.  கோடி கோடியா சம்பாந்திச்சுட்டு இன்னும் சம்பாதிச்சுட்டு இருக்கிறவனும் இதையே சொல்றான்.  ஏன்ன்னா அவன் இடத்துக்கு இன்னொருத்தன் வருதை விரும்பாத எரிச்சலாக இருக்கலாம். ஒரு சாமியார் மடத்தில் அவரை அருகில் இருந்து பார்க்க ஒரு தொகை, அடுத்த கட்டம் ஒரு தொகை கடைசி வரை ஒரு தொகை என நிர்ணயிக்கிறார்கள். அந்த கார்ப்ரேட் சாமியோ பணம் பண்ரதுக்கா இங்க வாழ வந்தோம்னு வெக்கமே இல்லாம பேசுறாரு. ஆடிட்டர் சொல் பேச்சு கேட்டு கார் தேவையா இல்லையானு கூட யோசிக்காம வருசம் ஒரு கார் இறக்கும் ஆசாமிகள் சொல்வார்கள்.... கயிற்று கட்டிலில் கூட உறக்கம், நிம்மதியான வாழ்க்கைனு.  ஆனா இவனுக எவனுமே பணம் இல்லாம  எதையும் செய்ய மாட்டானுக. ஏன்னா அவனுகளுக்கு தெரியும்.. பணம் எவ்ளோ முக்கியம்னு.  மாச வாடகை, பிள்ளைக படிப்பு,  தேவையான ஒரு நல்ல பொருளை வாங்க கா...

பாலினங்கள் அறிவியல் உடைத்து...காலம் ஏற்கும் சூழல் என்றோ?

 பாலினங்களில் நமக்கு தெரிந்தது ஆண் பெண் மட்டுமே. பிறகு திருநங்கை திருநம்பி என்ற மாற்றுப்பாலினங்கள் நமக்கு தெரியவந்தது. இப்போது அவர்களுக்கான உரிமைகள் குறித்து பேசிவருகிறோம். தன்பாலின ஈர்ப்பு குறித்தும் இப்போது பேச தொடங்கி இருக்கிறோம். ஆனால் பாலினங்கள் இத்தனை தானா ? என்றால் இல்லை என்கிறது அறிவியல். இவையெல்லாம் காலம் காலமாக இருந்தாலும் அறிவியல் இப்போது அதனை வகை படுத்துகிறது. ஆனால் மத நிர்வாக அரசுகளே அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. அது அப்படித்தான் தன் மத கொள்கைகளுக்கு  பாதிப்பு என கள்ள மெளனம் சாதித்து வரும். ஆனால் அறிவியல் உடைக்கும். காலம் ஏற்கும். சமீபத்தில் தமிழக அரசு ஒரு அட்டவணையை வெளியிட்டது. அதில் பலவகையான பாலினங்கள் இருந்தன. சிலர் அதில் சிரித்திருந்தார்கள். பலர் இதெல்லாம் இப்ப தேவையா என வழக்கம் போல நடுநிலையாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாய் அதனை யாரும் புரியவில்லை என்றே நினைக்கிறேன். அவன் ஆண். ஆண் தன்மையில் தான் இருக்கிறான். வாழ்கிறான். ஆனால் பெண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் ஆண்களையும் அவன் நாடமாட்டான். திருமண தாம்பயத்தில் பெரிய விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு...

இனியும் இந்தியாவின் மன்னராட்சி வரலாறு தெரியாமல் பொய்யாக கொண்டாடதீர்கள்

இயல்பாகவே நமக்கு தற்பெருமை அதிகம். ஒரு காலத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி என்றே படங்கள் வரும். அது மக்களுக்கு அறிவினை கொடுத்தது. இன்று மன்னராட்சி எப்படி இருந்தது தெரியுமா என கிராபிக்ஸ் படங்களை கொடுத்து முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை குழுவை வழி நடத்தினார்கள். பாகுபலி படத்தில் வசனம் வருமே “ நூறடி சிலை சில நூறு பேரையாவது பலிவாங்காதா “ என்ற வசனமே மன்னர்கள் வசனம். ஒருவேளை பாகுபலி மன்னராக வந்தால் அவன் பல்வாள் தேவன் போல தன் சிலையை வைக்கமால் இருப்பான், ஆனால் கோவில் கட்டுகிறேன் பலிகொடுப்பான். இதுதான் மன்னர்கள் ஆட்சி நிலை.   சிலப்பதிகாரத்தில் ஒரு வியாபாரியின் மகன் திருமணத்தில் மன்னர் மூன்று நாட்கள் அமர்ந்திருப்பார். அப்பவே கார்ப்ரேட் அடிமைகள் தான் போல மன்னர்கள். எழுதியது சமணம் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனிய வாடை கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களை தீ எரிக்கலாம் என கோவலன் மிசஸ் சாபம் கொடுப்பார்கள். அதிலும் தமிழ்நாட்டு மன்னர்கள் கொஞ்சம் காமெடி பீஸ் தான். வடதிராவிட மன்னர்ககளுக்கு வெளியில் இருந்து ஊடுருவல் நடந்தபடியே இருந்தது. அவர்கள் எதிர்...

உங்களது அன்பு எனும் பட்டாம்பூச்சி நம்பிக்கையாக எப்படி பறக்கிறது?

இங்கே எல்லாருக்குமே அன்புங்கிறது எப்போதும் பேசு பொருள் தான். அது பாலினத்துக்குள்ளேயாக இருந்தாலும்  சரி, எதிர்பாலினங்களுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி அன்பு என்ற வார்த்தை பயன்படுத்தியே வருவோம்.  அன்புடையார் எல்லாம் தமக்குரியர் என தமிழ் கிழவன் சொல்லியிருக்கிறான். எங்கே அன்பு இருக்குனு சொல்லிட்டிங்களோ அதுக்கு பின்னாடியே நம்பிக்கையும் வந்துடும். ரெண்டும் இரண்டு பக்கங்கள். ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்லை.  நான் ஏதோ ஒரு உறவில அன்பா இருக்கேன்னா அங்கே அவங்களுக்கு நம்பிக்கையாவும் இருக்கேனு அர்த்தம். எங்கே உங்க அன்பானவங்க லிஸ்ட் எடுங்க… அவங்கள் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை கவனிங்க…. ரெண்டும் ஒன்னுபோல இருக்கும். இருந்தா அன்பில் நிறைந்து இருக்கோம்னு அர்த்தம். இல்ல நம்பிக்கை இருக்கிற மாதிரி தெரியல. அடிக்கடி வெரிபிகேஷன் என்கொயரி எல்லாம் நடக்குதுன்னா அங்க அன்பே இல்லைனு சொல்லுவேன். ஆனா அதுக்கு அவங்க ஒன்னு சொல்லுவாங்க… அதாவது நான் கொஞ்சம் பொசசிவ்னு. அதுனால இப்டி செய்றேன்னு.  இதுக்கு தமிழ்ழ உடமையாக்குதல்னு பேரு. ஒரு பொருளை உடமையாக்க முடியும்.  ஒரு உயிர எப்படி முடியும் ? ஒரு உயிரின் ...

ஸ்வாதி முதல் பள்ளி மாணவி வரை ஆக்கப்பூர்வமாய் வெற்றி பெற்றிருக்கோமா ?

 தியேட்டர்ல டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கிறோம், இல்லாட்டி ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்றோம். ரெண்டுக்கும் கொஞ்ச காத்திருக்கணும்.  அட , உக்காந்த இடத்தில சொமோட்டால ஆர்டர் போட்ட கூட காத்திருக்கணும். காத்திருந்தாதான் தெரியும் அது முடியுமா முடியாதானு.... வந்தது நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும். என்ன சொல்ல வரேன்னா எதுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்திய நீதி ஆணையத்தில் செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ ஒரு தாமதம் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் அங்கே குழுமி அறிக்கை தரவேண்டுமென்ற அடிப்படையே இதற்கு காரணம்.  ஒரு சாலைவிபத்தில் இன்சூரன்ஸ் கேட்டு அலைந்து பாருங்கள் எத்தனை டிபார்மெண்ட் அதில் உள்ளே வருகிறது என தெரியும். அட ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டிப்பாருங்கள் என்னென்ன டிபார்மெண்ட் அதில் உள்ளே வந்து நிக்குமென தெரியும். இவர்கள் எல்லாருமே ஒரே நாளில் அமர்ந்து கையெழுத்திடும் அமைப்பு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மோசமாய் இருந்து கொண்டே இயங்குகிறது.  ஸ்வாதி என்றொரு பெண் இறந்து போகிறாள். உடனே நாம் கொதிக்கிறோம். அவன வெட்டுங்க, போலீஸ் என்ன செய்யுது, பாதுகாப்பில்லையா என ப...

தமிழ் சினிமாவில் பார்த்திபனின் மெனெக்கடல்கள் என்றும் பிரச்சினை தான்..!

 ஒரு படம் பார்க்க தோன்ற முக்கிய காரணமாக அமைவது அதன் பின்னால் இருக்கும் நடிகர் இயக்குனர் மட்டுமே. இன்னொர் பக்கம்  படத்தின் பெயர் அதன் போஸ்டர் வடிவமைப்பு போன்ற மெனக்கெடல்களும்  சேர்ந்தது தான். சுப்பிரமணியபுரம் படம் அப்படித்தான் கவனத்தை ஈர்த்தது. கைதி போஸ்டர் வடிவமைப்பு இது ஏதோ வேறுமாதிரியான படமென நம்மை கவனிக்க வைத்தது. இப்படியான சில படங்கள் உண்டு. இன்னொன்று இயக்குனர்கள். இவங்க இப்படித்தான் எடுப்பாங்கனு நம்மள நம்ப வைக்கிறது. ராஜமெளலி, ஷங்கர் படங்கள் எல்லாம் பிரம்மாண்டம் என பதிய வைப்பார்கள். இப்படியும் சில உண்டு. இன்னும் சில இயக்குனர்கள் வேறுமாதிரியான கதை களங்கள் தேர்வு செய்வார்கள். அது நமக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்.  ஒவ்வொரு படத்திற்கும் அது மாறுபடும். பாக்யராஜ், பாரதிராஜா  மணிவண்ணன் எல்லாம் இந்த வகையில் அடங்குவார்கள். இதில் பார்த்திபன் வேறு ஒரு தளத்தில் இயங்குகிறார். வித்தியாசமான படங்கள் கொடுத்தே ஆகவேண்டுமென மெனக்கெடுகிறார். ஆனால் அந்த மெனெக்கடல் தான் இங்கே பிரச்சினை.  அது என்ன செய்கிறது ஒரு கலைஞனை கதையை  கொலை செய்கிறது. ஒரு வீட்டில் இருக்கும் கடி...