முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உணவிலும் புகுத்தப்படும் அரசியல்... தேவையான விழிப்புணர்வா நாடகமா..!

உணவு சார்ந்த அரசியல் சமீப காலமாக பேசப்பட்டே வருகிறது. மாமிசம் சாப்பிடுறவா கிட்ட  அந்த குணம் இருக்கும்னு யாரோ ஒருத்தர் சட்டை போடமா உக்காந்து பேசிட்டு இருக்கார். இது யாரோ ஒருத்தர் இல்லை. இந்த மாதிரி நிறைய பேரு பேஷிண்டு இருக்கார்கள். நாமும் அதனை நம்பி நல்ல நாளும் பொழுதுமா ஏண்ட கறிங்கிற அளவுக்கு தெளிவா யோசிச்சுட்டு குழம்பி இருக்கோம்.. முதலில் உணவு என்பது சுவை சார்ந்து மட்டுமில்லை. அதன் மூலக்கூறான புரதம் சார்ந்தது. ஒரு அஞ்சு மிளகு எடுத்து வாய்ல போட்டு மென்னு பாருங்க. வயிறு என்ன ரியாக்சன் காட்டுதுன்னு. அதே பத்து மிளகு நல்ல வறுத்து பொங்கல் போட்டு வரும் போது சாப்டு பாருங்க.. வேறுபாடு தெரியும்.  நாம எதையும் பச்சையா சாப்டுறது இல்லை. எல்லாமே வேக வச்சு பொறிச்சு, வதக்கினு ஏகப்பட்ட கொதி நிலைக்கு கொண்டு போறோம். இப்போது நமக்கு கிடைக்க கூடியது எல்லாமே அதன் சத்து சார்ந்தவைகள் மட்டுமே. மாடு பால் கொடுக்கும். கோழி முட்டை கொடுக்கும்.  மாடு குட்டி போடும். கோழி குஞ்சு பொறிக்கும். இப்ப விசயத்துக்கு வரேன் கோழி சேவல் கூட சேரலனாலும் முட்டை போடும். சேவல் கூட சேர்ந்து போடுற முட்டையில தான் குஞ்சு பொ...

அஜித், விஜயை கொண்டாடும் ரசிகர்கள் மட்டுமே மூடர்களா..?

அஜித் ரசிகர் ஒருவர் இறந்து போயிருக்கிறார். உடனே பலரும் அறிவுரைகளை வாரி வழங்குகிறார்கள். உடனே தமிழ்நாட்டு ஆரிய கும்பல் ஒரு கொடி பிடிக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் தான் வடக்கு மக்கள் இங்கே வருகிறார் என சைடு கேப்பில் தன் ஆரிய விசுவாசத்தை காட்டுகிறார்கள். சுயமூளையற்ற அறிவாளிகளே, இங்கே வடக்கன் வருவது தமிழன் வேலை பார்க்க மறுப்பதால் இல்லை. கூலி பிரச்சினை. இன்றைக்கும் சிவகாசி பட்டாசு ஆலையின் அடிப்படை ஊதியம் தெரியுமா ? ஒரு ஆபிசில் ஒரு பெண் வேலைக்கான அடிப்படை சம்பளம் 5000 ரூபாய்.  ஆண் வேலைக்கு 7500 ரூ. ஆனால் அதே ஊரில் டாய்லெட் வசதியுடன் வீட்டு வாடகையே 5,500. இது  தமிழ்நாடு முழுக்க நிலவும் பிரச்சினை. இங்கே நிலவுவது தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற பெரும் பொய்யான கருத்துருவாக்கம் தான். நான் சொல்கிறேன் இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய அவன் தயாராக இருக்கிறான். ஆனால் சம்பளம் தான் முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை விசுவாசம். சமீபத்தில் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர், வேலையை விட்டுவிட்டு  வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். கேட்ட போது அவர் சொன்...

வாழ்க்கை போராட்டத்தில் மன்னிக்க முடியாத மன்னிப்பு..?

கமல் ஒரு படத்தில சொல்லுவாரு மன்னிப்பு கேட்கிறவன் மனுசன். மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்னு சொல்லுவாரு. இங்க தப்பு செய்யாதவனும் இல்லை. மன்னிப்பு கேட்காதவனும் இல்லை. ஆனா மன்னிப்பு கொடுக்கிறவன் இருக்கானானு பார்த்தா ரொம்ப கம்மிங்க. ஏன்னா நம்ம உளவியல் அப்படி. இப்ப ஒரு உறவில X ம் Yம் நெருங்கி இருக்காங்க. ஒரு கட்டத்தில் இந்த X ஏதோ தப்பு செஞ்சுட்டாரு. Yக்கு அதுனால மனசு பாதிப்பு. பொருளாதார பாதிப்பு. இப்படி ஏதோ ஒரு பாதிப்பு. அது பெருசு சிறுசு எல்லாம் அவருக்கு தான் தெரியும். காலமாற்றத்தில் X தன் தவறை உணர்ந்து Yகிட்ட மன்னிப்பு கேட்பாரு. இப்ப Yக்கு சிக்கல். அந்த சூழல் நிலைமை பாதிப்பு எல்லாமே கண் முன்ன வந்து போகும். ஏன்னா அவர் அதை எதிர்கொண்டாவர் Y தானே. இப்ப மன்னிப்பு கொடுக்கலனா இன்னும் ஏதாச்சும் பெருசா வருமோ, இல்லாட்டி ஊர் உலகம் ஏதாச்சும் சொல்லுமோனு பயந்து Xஅ மன்னிப்பாரு. இந்த Xக்கும் ஒரு சந்தோஷம். நிம்மதி எல்லாமே கிடைக்கும். மன்னிப்பு கேட்ட மறுநாளே Y கிட்ட பழைய படி உறவை அன்பை புதுப்பிக்க முயலும். ஆனால் Y ஒரு நாடக தன்மையிலே இருக்கும். ஏன்னா உளவியல் பயம் அப்படி.  சரி இப்ப என்ன செய்றது. Y ...

ஒரு பெண் ஆணை அடிப்பது தீர்வா..? இப்படியே வாழ்வது தான் விதியா.. !

வழக்கமான சேட்டன்கள் மொழியில் கொஞ்சம் குடும்ப உளவியல் பேசியிருக்கும் படம். சும்மா பெண்ணோட சுதந்திரம், நீதி, சமத்துவம் மட்டுமே பேசல. நாம் வாழும் சமூகத்தோட போலி தன்மையை இந்த படம் கடைசி வரை பேசிட்டே வருது. அதுவும் நுட்பமாக. புருசன் அடிச்சா திருப்பி அடிப்பேன். இப்டி ஒரு பொண்னு முடிவெடுத்தா இந்த சமூகம் என்ன நினைக்கும். அந்த குடும்பம் என்ன நினைக்கும். முக்கியமா புருசன் என்ன நினைப்பாங்கிறதுதான் படம். ஜெயா பிறந்ததில் இருந்தே அவளுக்கு சாய்ஸே இல்லை. எல்லாமே சான்ஸ் தான். அதை அவ தக்க வைக்கனும் அதுக்கு தானே கலாச்சாரம் பண்பாடு எல்லாமே இருக்கு.  நம் சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கிற எல்லாமே சான்ஸ் தானே. அவர்களால் தேர்வு செய்ய பெரிதாக வாய்ப்பு இல்லை. நல்ல மார்க்க எடுத்தாலும்  இது நம்மாளுக(?!) காலேஜ், பெரியப்பாவோட சித்தப்பா மக வயித்து கொழுந்தியா இந்த காலேஜ்ல புரொபசர் இருக்கா, வீட்டு பக்கத்தில இப்படித்தான் அமையும். விருப்பபட்ட கல்லூரியோ, படிப்போ நடுத்த குடும்பங்களில் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இன்றைக்கு கொஞ்சம் மாறியிருந்தாலும் எல்லாருக்குமான வாய்ப்பாக இது அமையவில்லை.  படிப்பு, ஆடைகள், வாய்ப...

டாடிஸ் லீட்டில் பிரின்ஸை விட தனித்த சூட்சமமான உறவு மம்மிஸ் எம்பரர்..!

  நம்ம எல்லாருக்கும் “டாடிஸ் பிரின்சி(Dad's little princess)” பத்தி தெரியும். அதே பிரின்சி திருமணத்திற்கு பிறகு அம்மாவின் பின்னாலே அலையும் உளவியலும் நமக்கு புரியும். ஆனாலும் அவர் எப்போதும் டாடியின் பிரின்சியாகவே தொடர்வார் தன் காலம் முழுவதும். அதை அவளோட கணவனால் கூட ஒன்றும் செய்ய முடியாது. இது நமக்கு தெரிந்த உறவு. நமக்கு தெரியாத இன்னொரு உறவு இருக்கிறது. அது #மம்மிஸ்_எம்பரர். தன் மகனை ராஜாவாக வளர்க்கும் மம்மி(அம்மா)களின் உளவியல் அது. இன்னும் சொல்லப்போனால் அது டாடிஸ் பிரின்சியை விட ரொம்ப நுட்பமானது. தனித்துவமனாது. சூட்சமமானது. வெளியில் இருந்து பார்க்கும் டாடி - பிரின்சி போல இது தெரியாது. அதில் அப்பா சொன்னால் மகள் கேட்பாள். மகள் பேச்சுக்கு அப்பா மறுக்கமாட்டார். அப்பாவின் பார்வை பார்த்து மகள் தனக்கு பிடிக்குமென்றாலும் செய்யாமல் தவிர்த்துவிடுவார். ஆனால் அதைவிட பெரிய ஒன்றை தன் அன்பின் சிணுங்களில் சாதித்துக்கொள்வார்.  அப்பா மறுக்கும் விடயத்தில் மகள் கொஞ்சம் அடம் பிடித்து சிணுங்கினால் அப்பா உன் இஷ்டம் என விலகிகொள்வார்.இப்படித்தான் இந்த உறவு இருக்கும். ஆனால் இந்த மம்மி - எம்பரர் வகையற...

துணிவில்லா விஜயின் வாரிசு அரசியல்

 தலைதலைமுறையாக சண்டை போட்டே சினிமா வளர்த்த நாடு இந்தியா. இதில் தமிழ்நாடும் அப்படியே தொட்டு தொடருகிறது சிவகார்த்திகேயன் காலம் வரை.. தீடிரென விஜய் நம்பர் 1 என அவர் படத்தின் தயாரிப்பாளாரே சொல்கிறார். அவருக்கு தியேட்டர் அதிகம் கொடுங்கள் என்கிறார். சமீபத்தில் பீஸ்ட் படம் மட்டுமே வெளியானது. உடன் டப்பிங் கே ஜி எஃப்2. பீஸ்ட் படத்திற்கு அதிகம் திரையரங்கு. அதனையும் ரெட் ஜெயன்ட் தான் வெளியிட்டார். ஆனால் இரண்டாம் நாளே படம் பப்படம் ஆனது. ( வசூல் எடுத்துவிட்டது. ) தியேட்டர் அதிபர்கள் கேஜிஎப்2 பக்கம் நகந்தார்கள். ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒன்றும் சொல்லவில்லை. பீஸ்ட் வசூல் குறையும் போது கேஜிஎஃப்2 நோக்கி நகர்ந்தார்கள். வசூலை எடுத்தார்கள். நம்பர் 1 நம்பர் 2 எல்லாம் இல்லை. வசூல் தான் இங்கே எல்லாம். கேஜிஎஃப்2 உடன் தோற்ற அந்த கோவம் விஜய்க்கு உண்டு. விஜய் வாரிசு படத்தை செல்வகுமார் என்பவர் படம் தொடங்கிய பொழுதே வாங்கிவிட்டார். இவர் தான் விஜய் அடுத்த படம் தயாரிப்பாளர். வேறு யாரும் வாங்கி படம் ஏதும் பிரச்சினை என்றால் தன்னிடம் வருவார்கள் அதற்கு நாமே வாங்கிவிட்டால் சமாளித்துகொள்ள்லாம் என களத்தில் இறங்கினார். இன...

ஒரே நாடு ஒரே ஆதாரு...அதுக்கு இணை இதுக்கும் இணை என்ன நடக்கிறது..?

  மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள் :  இப்ப வரைக்கு யார் இணைக்கணும், எப்படி இணைக்கனும்னு விபரங்கள் வருதே தவிர ஏன் இணைக்கணும் தெரியல. மின் இணைப்புல எதுக்கு ஆதாருனு கேட்டா நெறிப்படுத்த என சொல்கிறார்கள். அப்படியெனில் இதுவரை நெறிப்படுத்தவில்லையா ? ஆதார் முலம் மட்டுமே நெறிப்படுத்த முடியுமா ? ஆதார் என்பதே தோற்றுபோன ஒன்றாக அல்லது தரவுகளை விற்கும் ஒன்றாக மட்டுமே இந்தியாவில் இருக்கிறது.  இந்த லட்சணத்தில் தேர்தல் அடையாள அட்டையுடன் இணை, மின் இணைப்புடன் இணை என்பதெல்லாம் பணமதிப்பிழப்பில் வீதியில் நிறுத்தியது போலவே இருக்கிறது. மத்தி(ஒன்றி)ய அரசின் முட்டாள்தனங்களை எதிர்ப்பார்கள் என்றே திமுகவை நம்பினார்கள். ஆனால் இவர்களோ ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே பின் தொடர்கிறார்கள். ஒரு முணுமுணுப்பு கூட ஆளுங்கட்சியிடம் இல்லை.  நீட், ரம்மி, என மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுகிறார், அது  ஒன்றிய அரசின் சதியெனில், ஒன்றிய அரசின் ஆதார் இணைப்பை வாக்காளார் அடையாள அட்டை, மின் இணைப்பு என  சிரம் மேற்கொண்டு பணி செய்வது யாரின் சதி ? எரிவாயு மானியம் இல்லாமல் போனது எல்லாரும் அறிவார்கள். டோ...

கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல..இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க...

ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாலை போடுறது  எல்லாம் அவ்ளோ பெருசா இல்லை. அப்புறம் சினிமா மூலமா கொண்டு வந்தாங்க. ரஜினி மாலை போட்டாரு, நம்பியார் மாலை போட்டாரு, அமிதாப் மாலை போட்டாரு, படங்கள் கட்டுரைகள் என பெரும் விளம்பரத்துக்கு பின்னாடி ஐயப்பன் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் கடவுளாகிப்போனார். இன்று வழக்கமாய் செல்லும் சாலையில் அந்த கோவில் திடீரென கொஞ்சம் கூட்டம் அதிகமாய் தெரிந்தது. பின்னர் விபரம் புரிந்தது இன்று கார்த்திகை. மாலைபோடுவார்கள். விரதம் இருப்பார்கள். தனித்த அடையாளத்தோடு ஆடைகள் அணிந்துகொள்வார்கள். அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு தீட்டாவார்கள். வீட்டில் அவர்கள் தனித்துவமாய் தெரிவார்கள். வீட்டில் பெண்களுக்கு இன்னும் வேலைகள் கூடும். சாஸ்திரம் சம்பிரதாயமென கூடும்.  எனக்கு இப்பவும் புரியாத விடயம், மட்டன் சிக்கன் சாப்பிட்ட சத்து தான் அவர்கள் மலையேற உதவப்போகுது. அதனால் ஊறிய ரத்தம் உடம்பில் இருக்கும். இந்த ஒரு 60 நாளோ 40 நாளோ விரதம் இருந்தால் கொழுப்பு குறையும். மத்தபடியே எல்லாமே அதே தானே. அது போதுமா கடவுளுக்கும். இந்த 60 நாள் மட்டும் அவர் சீர்தூக்கி பார்த்து அனுக்கிரகம் செய...