முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Instagram Reelsல் கெத்தான பெண்கள்... கேலிக்கூத்தாகும் ஆண்கள்

எப்போது ரீல்ஸ் (Reels) பார்த்தாலும் அதில் பெண்களின் கவர்ச்சி ரீல்ஸ் , ஆண்களுக்கு அதற்கு வாய்ப்பில்லை... அதனால் சில கேலிக்கூத்துகளை செய்து வரும் ரீல்ஸ் ஒரு பக்கம். இரண்டுமே கண்களில் படும். இதனை தாண்டி சில முத்துக்கள்  அரிதாய்.  முதலில் பெண்கள். அவர்கள் அவர்களின் கவர்ச்சியை நம்பியே வருகிறார்கள். இப்படியெல்லாம் சம்பாதிக்கலாமா என்றால் இந்த கேள்வியை நடிகைகள் படத்தில் காட்டிய கவர்ச்சியில் கேட்டிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் இந்த ரீல்ஸ்கள். ஏன் யாரோ கட் சொல்லி வருவது மட்டுந்தான் நடிப்பா... சம்பாத்தியமா , அவர்களே கட் சொல்லி மொபைலில் எடுத்தால் அது தவறாகிவிடுமா ?  எதனை சொல்லி அவர்களை மதங்கள் அடக்கியதோ அதனை முன் வைத்து இப்போது சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். சும்மா திட்டிக்கலாம்... அங்கே அத்தனை லட்சம் வியூ ஆகுதே.... அதெல்லாம் பார்க்கிறது யாரு ? கீழே கமெண்ட் செக்சன் பாத்தா நம்ம கலாச்சாரம் பண்பாடு எல்லாம் தெரியும். அக்கா உங்க கூட ஒரு நாள்.... நு பல கமெண்ட்... டேய் அக்கா கூட எப்டிடானு கேட்க தோணுது. இந்த மாதிரி வீடியோ போடும் “அக்கா”களுக்கு ஃபாலோயர் யாருனு எட்டிப்பாருங்க.. உங்...

விடுதலை - 2 இதெல்லாம் இப்ப பேசலாமா..? கொண்டாட வேண்டுமா..?

விடுதலை - பாகம் இரண்டு :  தமிழ்சினிமா பார்க்காத ரசிக்காத ஒரு கதைக்களம். நக்சலைட் பக்கம் இருந்து கம்யூனிசம் பேசி இருக்கிறது.  இல்லையே அந்த படம் இருக்கிறதே இந்த படம் இருக்கிறதே என்பவர்களுக்கெல்லாம் அந்த படம் தான் பாதிக்கப்பட்டதால் தனக்கு தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டதால் ஹீரோ அரசுக்கு எதிராக மாறுவார். அதுவும் கம்யூனிச பார்வையில் இல்லாமல் ஹீரோயிச பார்வையில். ஆனால் இந்த படத்தில் பெருமாள் வாத்தியார் கருப்பனாக மாற காரணம் அவர் கண் முன் நிகழும் சாதீய வர்க்கப்போர்கள்.அதுதான் படத்தின் பலம். அதுதான் படத்தின் பலவீனம். படம் நெடுக பெருமாள் வாத்தியார் போராடுகிறார் கொல்கிறார் அது யாருக்கு என்பதில் போதிய அழுத்தம் இல்லாமல் கடந்து செல்கிறது.  தமிழகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கோர்த்து ஒரு மாலையாக்கி இருக்கிறார்கள். தமிழ் சினிமா நூற்றாண்டில் பல படங்கள் கம்யூனிசம் பேசி இருந்தாலும் தத்துவார்த்த ரீதியில் உரையாடி முதல் படம் விடுதலை தான்.  பெருமாள் வார்த்தியார் என்ற கருப்பன் இடது சாரி கொள்கைவாதியாக இருந்து அழித்தொழிப்பு இயக்கத்தை தொடங்கி பின்னர் அது சரியான தீர்வல்ல என மீண்டும் எழுத்து பேச்சு ...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

மொழியா... இசையா... எது பெருசு..? இளையராஜா Vs வைரமுத்து போர் யார் மேல தப்பு..!

கோழியா  முட்டையாங்கிற மாதிரி பாடலா இசையானு உருண்டுகிட்டு இருக்காங்க..!  உண்மையிலே வைரமுத்து அந்த பேட்டியில் தெளிவாக சொல்லியிருக்கிறார். சில நேரங்களில் இசை, சில நேரங்களில் பாடல் என சொல்லியிருக்கிறார். அது உண்மையும் கூட. ஆனால் சொல்லியவர் வைரமுத்து என்பதால் பலருக்கு ஒவ்வாமை. அவரவர் கலருக்கு ஏற்றார் போல சிலர் ராஜாவை இழுக்க சிலர் வைரமுத்துவை இழுக்க இது போக கங்கை அமரன் ஏற்றிவிட்ட ஏணி பற்றியெல்லாம் பேசுகிறார். ( அத யார் சொல்றா பாத்திங்களா ? )    செய்யுள் : கவிதை : பாடல் : செய்யுள் என்பது இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் ஒரு பாடல் எனலாம். செய்யுளில் அலங்கார சொல்லைவிட கருத்தே முக்கியம் என இருக்கும். நிறைய இருந்தாலும் எல்லாருக்கும் புரிந்த ஒரு செய்யுளை சொல்கிறேன்.  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி  ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே இதில் இசைத்தன்மை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இசைத்தன்மை என சொல்கிறேன். இசையென சொல்லவில்லை. இசைத்தன்மை என்பது வாசிக்கும் முறையே ஒரு தாளக்கட்டுக்குள் இர...

சொல்லி அடித்த 'கில்லி' விஜய்க்கு லைஃப் டைம் படம்தான்

கில்லி உண்மையிலே நடிகர் விஜய்க்கு ரொம்பவே முக்கியமான படம்.  அப்பா தயாரிப்பில் நடிக்க தொடங்கிய விஜய்க்கு (1992) பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் பூவே உனக்காக (1996). அதுவரை குடும்ப ஆடியன்ஸ் என்படும் ஜெனரல் ஆடியன்ஸ் விஜய் பக்கம் திரும்பவில்லை. இந்த படம் விஜய் பக்கம் திரும்ப வைத்தது. அது வரைக்கும் வந்த படங்கள் எல்லாமே விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்த படமாகவே அமைந்து போனது. அடுத்து காதலுக்கு மரியாதை (1997 ) இன்னும் அடுத்த கட்டம் அவரை நகர்த்தியது. காதலுக்கு மரியாதை விஜய் ஒரு டிரெண்ட் செட்டராக மாறிப்போனார். கதையும் மாறிபோனது. தொடர்ந்து அப்படியான படங்களே அமைந்து போனது. காதலுக்காக விஜய் என்றே கதைகள் அமைந்து போனது. ஒரு கட்டத்தில் அது மெல்ல தேய தொடங்கியது. ஏராளமான காதல் கதைகள் வந்து குவிந்தன.  சரி ஆக்ஷன் பிளாக் என பகவதி, யூத், தமிழன் என முயற்சித்தும் செல்ஃப் எடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் அவரை மீட்க வந்த படம் தான் திருமலை (2003). கொஞ்சம் ஓவர் ஹீரோயிசம் கொஞ்சம் எமோசனல் என கலந்துகட்டிய படம். விஜய் இனி எந்த பாதையின் போகலாம் என்பதை திர்மானமாக சொல்...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...

யாருடா நீங்கலாம் நல்லவன்னு காட்டிக்க ஒரு டிராமா ஸ்டேஜ் பண்றீங்க பாரு... அத தான் சகிச்சுக்க முடியல..!

"நல்ல” என ஒரு சொல் தமிழில் உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழிக்கிறது. நல்ல மகனா இருப்பது நல்ல கணவனாக, நல்ல தொழிலாளியாக நல்ல பக்தனாக என இந்த ”நல்ல” நீடிக்கும்...  இந்த நல்ல என்பதற்கு சமூகம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்பது "கொத்தடிமையாக இரு" என்பதாக இருக்கும்.  உன் மேல் என்ன அதிகாரம் செலுத்தினாலும் நீ ஏன்னு கேட்கப்பிடாது... எல்லா மதங்களும் அப்டிதான்.. ஏன்னே கேட்க கூடாதுனு இருக்கும். இந்த மதங்கள் எல்லாம் கூடி நல்ல என்ற சொல்லு எல்லா உறவுகளிலும் நிலைகளிலும் விளக்கம் கொடுத்து வைத்திருக்கும். அதன் படி அந்த மத கடவுளே வாழ்ந்தது இல்லை. அது வேறுவிடயம். ஆனாலும் இந்த மத சமூகம் அந்த “நல்ல” என்ற ஒன்றில் நிலைபெற போராடிக்கொண்டிருக்கும்.  சரி ’நல்ல’ வாழ என்ன செய்யனும். ரொம்பவே சிம்பிள். நீங்க இந்த உலகத்தில வாழ வந்த மத்த கோடிக்கணக்கான உசுரு போல ஒரு உசுரு. எதையும் காப்பாத்த அழிக்க வரல. நா இல்லாட்டியும் இந்த உலகம் அது பாட்டுக்கு செயல்படும். நா இருந்தாலும் செயல்படும். யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செயல் செய்யல. நானும் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க வரல. எனக...

தமிழர் வாழ்வியலில் மா(ம)தம் உணர்த்தும் உன்னத செய்தி?

தை மாத முடிவில் இருக்கிறோம். அடுத்து மாசி, பங்குனி என முக்கியமான மாதங்கள் தமிழர்களுக்கு. ஆம்.  குலதெய்வ வழிபாடு இந்த மாதங்களில் மேலோங்கி நிற்கும். அய்யானாரில் தொடங்கி கருப்பசாமி, பேராத்து அம்மன், சுடலை மாடன், இருளாயி, கருப்பண்ணசாமி, செண்பகத்தாயம்மாள், சொறிமுத்து அய்யனார், பெரிய கருப்பன்.... என நீளும் பட்டியல் அது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கூடிக்கொண்டாடி பகிர்ந்து பிரிதலே இந்த வழிபாட்டில் நோக்கமாக இருக்கும்.  வாழ்ந்துபோன ஒருவருக்கு நன்றி கூறும் இடமாகவே அது பார்க்கப்படும். பெரும்பாலும் வயக்காட்டு நிலங்களிலும், ஆத்தோர படுகைகளிலும், ஊருக்கு வெளியே வெட்ட வெளிகளிலும் வழிபாட்டு கூடுகைகள் இருக்கும். பெரிய கலையம்சத்தோடு எல்லாம் இருக்காது அந்த ஆலயங்கள். சக மனிதரை போலவே அந்த தெய்வங்கள் நிற்கும். அதன் வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பவரும் அந்த குடும்ப சொந்தங்களை சேர்ந்த ஒருவர் மட்டுமே. அவரே காப்புகட்டி அந்த வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பார்.  பிறகு தலைக்கட்டுகள் ( ஒருவனுக்கு திருமணமாகி தனியாக வரிகட்டினால் அவர் தலைக்கட்டு) அமர்ந்து பேசுவார்கள் .அடுத்தாண்டு இந்த மாதிரி செய்யணும் இதையெல்...